வாரிசு படத்தில் S.J. சூர்யா.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கௌதம் & மஞ்சிமா திருமணம்.. நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய கல்யாண வீடியோ!

தற்போது 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று வாரிசு படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படக்குழு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியை வாழ்த்தும் வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர்கள் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, குஷ்பு, எஸ் ஜே சூர்யா, ஶ்ரீ காந்த், ஷாம், சண்டை பயிற்சி இயக்குனர் திலீப் சுப்பராயன், இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி ஆகியோர் வாழ்த்தும் வீடியோவாக இது அமைந்துள்ளது. இந்த வீடியோ மூலம் நடிகர் எஸ் ஜே சூர்யா வாரிசு படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | இரண்டு நாளாக உலகப்புகழ் பெற்ற தமிழக கோயிலில் நடிகை நிமிஷா சஜயன்.. வைரல் போட்டோஸ்

வாரிசு படத்தில் S.J. சூர்யா.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah in Vijay Varisu Official from SVC

People looking for online information on Sj suryah, SJ Suryah in Varisu Movie, Varisu, Vijay will find this news story useful.