போடு.! ஷங்கர் - ராம் சரணின் #RC15-ல் SJ சூர்யாவா ..? வெளியான OFFICIAL அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் - ராம் சரண் இணையும் RC15 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | டிவி நிகழ்ச்சியில் Dance ஆடும்போது சோகத்தின் உச்சம் - சுஜா & சிவா சொன்ன ஷாக்கிங் தகவல் Exclusive

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார்.  ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் அடுத்தடுத்து இயக்க இருக்கிறார், ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.

இதில் RC15 படத்தின் துவக்க விழா கடந்தாண்டு செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இந்நிலையில்  #RC15 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஐத்ராபாத் & விசாகப்பட்டினத்தில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என ஷங்கர் ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இது குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

Also Read | Suriya42: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. வெளியான கொல மாஸ் மோஷன் போஸ்டர்!

போடு.! ஷங்கர் - ராம் சரணின் #RC15-ல் SJ சூர்யாவா ..? வெளியான OFFICIAL அப்டேட்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suriyah Joined the set of Shankar Ram Charan RC15

People looking for online information on Ram Charan, RC15, Shankar, Sj suryah will find this news story useful.