வெந்து தணிந்தது காடு படத்தினை பார்த்த பிறகு பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யா படத்தினை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
Also Read | த்ரிஷா & ஷோபிதா அசத்தல் நடனம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த LYRIC VIDEO!
வெந்து தணிந்தது காடு படம் நேற்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 84 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 64 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி ஏரியாவில் 43 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 63 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 78 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 41 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 51 திரையரங்குகளிலும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு இந்திய அரசின் சென்சார் போர்டு
U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகர் எஸ் ஜே சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இப்போது தான் VTK படத்தை பார்த்தேன் 🥰👍👍👍 அருமையான தைரியமான முயற்சி இயக்குனர் கௌதம் மேனன் 🥰👍 ரஹ்மான் சார் 👌💐👍 & என் நண்பன் 21 வயதான முத்து & முதிர்ந்த கேங்ஸ்டர் முத்து பாய் சிம்பு sir👌🤗👍 வாழ்த்துகள் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் 💐💐💐👍" என எஸ் ஜே சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
Also Read | செல்வராகவன் நடிக்கும் பகாசூரன்.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!