ரீ ரிலீஸ் ஆகும் விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்.! SJ சூர்யா ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி. விஜய், ஜோதிகா இருவரின் காம்போவில் உருவான இந்த திரைப்படம் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் அமைந்திருந்தது. பெரும் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் சிவா - ஜெனிபர் என்கிற 2 கேரக்டர்களுக்குள் நடக்கும் சண்டையும் காதலும் படம் முழுக்க நகைச்சுவையாகவும் காதலுடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

Advertising
>
Advertising

Also Read | நேற்றுடன் Titanic 25 வருடம் நிறைவு.. அவதார் 2-லும் டைட்டானிக்கை நினைவூட்டும் காட்சிகள்.!!!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்திலான இந்த திரைப்படம் அப்போது மட்டுமல்லாமல் இப்போதும் இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

தமிழில் விஜய், ஜோதிகா மறைந்த நடிகர் விவேக் மற்றும் பலர் நடித்து வெளியான குஷி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர், தமிழில் 2000 ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி வெளியானது. இதேபோல் தெலுங்கில் 2001-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் குஷி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படம் வெளியானது. 

இந்நிலையில் தற்போது வரும் புத்தாண்டு முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி  சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, தெலுங்கு குஷி வெர்ஷன் திரையரங்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை நடிகரும் குஷி திரைப்படத்தின் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தனது twitter பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார்.

அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பிலான பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படமும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியானது. இதேபோல் கே.டி.குஞ்சுமணி இயக்கத்தில் பல வருடம் முன்பு வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான பிரம்ம தேசம் திரைப்படம், இத்தனை ஆண்டு காலம் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் குஷி திரைப்படத்தின் தெலுங்கு ரிமேக் படமும் ரீ ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Also Read | “40 வருடம் கழிச்சுதான் எனக்கே தெரியுது”.. வனிதாவின் உறவினரா இந்த நடிகை? அவரே சொன்ன உண்மை..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suriya Vijay Kushi Pawan Kalyan Telugu re release

People looking for online information on Boomika, Jyothika, Kushi, Pawan Kalyan, Re Release, SJ Suriya, Vadhandhi, Varisu, Vijay will find this news story useful.