வைபவ் நடித்துள்ள படம் சிக்ஸர். தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஒளிபரப்பாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சாச்சி இயக்கியிருந்தார்.
6 மணிக்கு மேல் கண் தெரியாத ஒருவன் எப்படி காதல் செய்து கல்யாணம் வரை செல்கிறான், வாழ்க்கையில் தன் குறையை தாண்டி எப்படி சாதிக்கிறான் என காமெடியாக இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இயக்குநர் சாச்சி சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய் நடித்த கத்தி போன்ற படங்கள் உட்பட பல தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த காமெடியன் சதீஷின் மச்சான் ஆவார்.
இவருக்குதான் நேற்றைய தினம் (1.9.2021) புதன்கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. சென்னையை சேர்ந்த டாக்டர்.சரண்யா (MBBS) என்கிற பெண்னை இவர் மணந்துள்ளார்.
இந்த திருமண நிகழ்வில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மணமக்களை சந்தித்து வாழ்த்து சொல்லி புகைப்படத்தில் நின்றுள்ளார்.
இதேபோல் நடிகர் மிர்ச்சி சிவாவும் இந்த திருமணத்துக்கு வருகை தந்துள்ளார். மணமேடையில் மணமக்களிடையே மிர்ச்சி சிவா கலகலவென பேசியும் மணமக்களை வாழ்த்தியும் சென்றுள்ளார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த தம்பதியரின் திருமண நிகழ்விற்கு வருகை தந்துள்ளதையும் புகைப்படங்களில் காண முடிகிறது.இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் சாச்சி இயக்கிய சிக்ஸர் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் எனும் சூழலில் ஜிப்ரான் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் P.G முத்தையா , அஜய் (நடன இயக்குனர்), நிப்பு சாமி, நடிகை ரித்திவிகா, வென்பா, கிருத்திகா, அமுதவாணன், ஆகாஷ், கலக்கப் போவது யாரு குரேஷி, தினேஷ் கண்ணன், ஜோமின், விஜய் டிவி தீனா, பாலா, TSK, அஸார், தங்கதுரை, KPY சதீஷ், ஆதம்ஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதைத் தவிர இயக்குனர் சாச்சியின் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.