போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் வீட்ல விஷேசம். இந்தியில் வெளியாகி, தேசிய விருதை வென்ற பதாய் ஹோ என்கிற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார்.
Also Read | A.R ரஹ்மான் மகள் திருமண விழா.. கலந்து கொண்ட அஜித் குடும்பத்தினர்! தீயாய் வைரலாகும் ஃபோட்டோஸ்
இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து இயக்கியும் உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதனையொட்டி இந்த படம் தொடர்பாக நடிகர் சத்யராஜ், நடிகை ஊர்வசி இருவரும் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஜாலியாக பகிர்ந்துகொண்டனர். இதில் நடிகை ஊர்வசி பேசும்போது, “நமக்கே நமக்கென்று ஒரு கேரக்டர் உருவாக்கப்படும்போது கேரக்டருக்காக கொஞ்சம் சம்பளத்தில் சமாதானம் செய்துகொண்டு நடிக்கலாம். இந்த கேரக்டர் தான் நடிக்க வேண்டும் என்றால் எப்பாடு பட்டாவது அதை செய்துவிடுபவர் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி. நடிகர் சத்யராஜ் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர்.” என பேசினார்.
பின்னர் பல்வேறு விஷயங்களை பற்றிய பேசிய நடிகர் சத்யராஜ் முன்னதாக, “நான் வாழ்க்கையில பிடிவாதமான ஆள் இல்லை. ஒரு பக்கம் கதவு இல்லேன்னா இடதுபக்கம் போவேன், அங்க கதவு இல்லேன்னா ரைட்ல போய் பாப்பேன்.. இல்லாட்டி திரும்பி போவேன். எங்கயுமே கதவு இல்லன்னா அங்கயே படுத்துக்குவேன். வேற என்ன பண்ண முடியும்? எங்கிட்ட அப்ளிகேஷன் இல்ல. நான் கோயிலுக்கு போகாததுக்கு காரணமே இதான். கடவுள் நம்பிக்கை இருக்கா.. இல்லையா என்பது வேற விஷயம்.. எங்கிட்ட அப்ளிகேஷன் இல்ல.. (இது தான் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, வேண்டுகோள் இல்லை என ஊர்வசி விளக்குகிறார்.)” என்று ஜாலியாக பேசினார்.
தொடர்ந்து பேசியவர், “நான் பிஎஸ்சி பாட்டனி அட்டெம்ப்ட் .. நான் படிச்சு முடிக்கும்போது தோட்டம் துறவை வித்துட்டாங்க.. நம்ம படிப்புக்கு வேலையும் கெடைக்காது. நம்ம படிப்புக்கு வேலையும் கெடைக்காது. நான் கொஞ்சம் மெமக்ரி பண்ணுவேன். சிவகுமார் (நடிகர்) அண்ணேன் குடும்பம் பழக்கம்... சரி சினிமாவுல முயற்சி பண்ணுவோம்னு மெட்ராஸ் வந்தேன்.. அவரோட ஷூட்டிங் போகும்போது போவேன்.. அப்படிதான் சினிமாவுக்கு வந்தேன்.. பெரிய லட்சியமும் இல்லை. ஹீரோ ஆவேன்னு நெனைக்கல.. சரி ஹீரோ ஆனதும் பின்னர் டான்ஸ் எல்லாம் பழகினேன்” என்று கலகப்பாக குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "என் மருமகளாவும் நடிச்சிருப்பாங்க.. ஜோடியாவும் நடிச்சிருப்பாங்க" - சத்யராஜ் கலகலப்பு பேட்டி