இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி காந்த்.
Also Read | திருமணமாகி 100-வது நாள்.. "37 வருசத்துல".. மனைவி மகாலட்சுமி பற்றி நெகிழ்ந்த ரவீந்தர்!
1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
ரஜினி காந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.
பீஸ்ட் படத்தினைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தினை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் இந்த படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து "தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க - என்றென்றும் உங்கள் ரசிகன்" என ட்வீட் செய்துள்ளார்.
Also Read | சொந்த ஊரில் சிவகார்த்திகேயன் மகனுக்கு காது குத்தி மொட்டை.. பிரபல கோயிலில் சாமி தரிசனம்!