"விஜய் தேவரகொண்டா கூட சேர்ந்து ஒரு படம்".. 'PRINCE' சிவகார்த்திகேயனின் வைரல் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா உடன் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | PS1: பொன்னியின் செல்வன் படத்தின் மூன்று வார மொத்த வசூல்.. தெறி மாஸ்

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ளார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ப்ரின்ஸ் படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கனும். ப்ரின்ஸ் போல உடையணிந்து விஜய் தேவரகொண்டா இந்த விழாவுக்கு வந்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் மிகவும் பிடித்த படம். விஜய் தேவரகொண்டா சினிமா வாழ்வு ராக்கெட் வேகத்திலானது. குறுகிய கால இடைவெளியில் பான் இந்திய நடிகராவது எளிய செயல் அல்ல" என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். 

இந்த ப்ரின்ஸ் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.

Also Read | Video: "பிரிட்டிஷ் பொண்ண Love பண்ணும் இந்திய பையன்".. 'PRINCE' பற்றி SK ..!

"விஜய் தேவரகொண்டா கூட சேர்ந்து ஒரு படம்".. 'PRINCE' சிவகார்த்திகேயனின் வைரல் பேச்சு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Willing to do film with Vijay Devarakonda

People looking for online information on Prince Movie, Prince Movie Pre Release, Sivakarthikeyan, Vijay Devarakonda will find this news story useful.