தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பாளராக சில படங்களைத் தயாரித்துள்ளார்.
Also Read | “ஒரு சர்ப்ரைஸ் நடிகர்”… ராம் & நிவின் பாலி படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி Tweet
கோலிவுட் to பாலிவுட்…
தீனா படம் மூல்மாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ். இதையடுத்து அவர் இயக்கிய ரமணா, கஜினி ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. தான் இயக்கிய கஜினி திரைப்படத்தை இந்தியில் அமீர்கானை வைத்து ரீமேக் செய்து இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனரானார். பின்னர் தமிழில் சூர்யா நடிப்பில் ஏழாம் அறிவு என்ற படத்தை இயக்கினார்.
விஜய்யுடன் கூட்டணி…
ஏழாம் அறிவு திரைப்படத்துக்குப் பின்னர் துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து விஜயுடன் மூன்று படங்களில் இணைந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தார். அதையடுத்து ரஜினி நடிப்பில் தர்பார் திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் அவர் இயக்க உள்ள படம் பற்றிய அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனம்…
தொடர்ந்து படங்களை இயக்கிவந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், இடையில் ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ‘எங்கேயும் எப்போதும்’, வத்திக்குச்சி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பை நிறுத்திய அவர் இப்போது மீண்டும் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்டர்…
கௌதம் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பொன் குமார் இயக்கும் புதிய படமான ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தை முருகதாஸ் Purple Bull நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த திரைப்படம் ஒரு வரலாற்று பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான அந்த போஸ்டர் இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குனர் N.S.பொன்குமார் கூறுகையில்,
படத்தின் இயக்குனர் பொன் குமார் “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது”எனக் கூறியுள்ளார்.
Also Read | ”ஒவ்வொரு துளி அன்பையும்….” நன்றி தெரிவித்து நிக்கி கல்ராணி பகிர்ந்த வைரல் PICS & Tweet