“TOTAL BLAST”… ‘விக்ரம்’ படம் எப்படி இருக்கு?... நடிகர் சிவகார்த்திகேயனின் வைரல் TWEET

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் திரைப்படத்தைப் பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertising
>
Advertising

விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

பாஸிட்டிவ் விமர்சனம்…

வெளியானது முதல் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது விக்ரம். குறிப்பாக நடிகர்கள் கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதுபோலவே அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இவர்கள் தவிர படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்களும் திரையரங்கில் ரசிகர்களிம் கைதட்டலைப் பெற்றுள்ளனர்.

வசூல்…

உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம் என சொல்லப்படுகிறது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த காரையும், உதவி இயக்குனர்களுக்கு மோட்டார் பைக்குகளையும் நடிகரும் தயாரிப்பாளருமான கமல் பரிசாக வழங்கியுள்ளார்.


சிவகார்த்திகேயன் Tweet

விக்ரம் திரைப்படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல திரையுலகைச் சேர்ந்தவர்களும் படத்தைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். விக்ரம் ரிலீஸூக்கு முன்பே படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகளைக் கூறியிருந்த சிவகார்த்திகேயன், தற்போது படத்தைப் பார்த்து “Total Blast… கமல் சார் Swag. லோகேஷ் மேக்கிங். அன்பறிவ் ஸ்டண்ட் காட்சிகள். விஜய் சேதுபதி & பகத் ஃபாசில் நடிப்பு, சூர்யா சார் சர்ப்ரைஸ் எண்ட்ரி அனைத்தும் அற்புதமாக இருந்தன. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த டிவீட் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan tweet about vikram movie got attention

People looking for online information on Kamal, Lokesh Kanagaraj, Sivakarthikeyan will find this news story useful.