ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR". ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு என்று இயக்குநர் திரு ராஜமௌலி கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படத்தை பாராட்டி டிவீட் செய்துள்ளார். அதில், "RRR ஐப் பார்த்து வியக்கத்தக்க வகையில் திகைத்தேன் 🔥🔥💥💥 மாஸ்டர் கதைசொல்லி இயக்குனர் ராஜமௌலிக்கு இன்னொரு பிளாக்பஸ்டர். ஜூனியர் NTR & ராம்சரண் எனர்ஜி & நடிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது🤗🤗நாட்டு நாட்டு பாடல் & சண்டை காட்சிகள்🔥🔥 அதிகபட்சம் ரசித்தேன்👍" என டிவிட் செய்துள்ளார்.
ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க, எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கியாண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கவனித்துள்ளார். இந்த படத்துக்கு CBFC மூலம் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 5 நிமிடங்கள்.