சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
Also Read | AK62: நடிகர் அஜித்குமார் - தயாரிப்பாளர் LYCA சுபாஸ்கரன் சந்திப்பு.. வைரலாகும் ஸ்டைலிஷ் PHOTO!
கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த 'Don' படம் உலகெங்கும் வெற்றிகரமாக (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது.
டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.
மரியா ரியாபோஷாப்கா, போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022 அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்த படத்தின் Batch Work படப்பிடிப்பு செங்கல்பட்டில் உள்ள பிரபல லதா சினிமாஸ் திரையரங்கில் நடந்து முடிந்தது.
பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பிரின்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Also Read | ஆக்ரோஷமான லுக்கில் 'கேப்டன்' ஆர்யா.. வெளியான மிரட்டலான ரிலீஸ் தேதி போஸ்டர்!