வில்லன் ரோலில் சிவகார்த்திகேயன்? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்

Advertising
>
Advertising

Also Read | இந்த வருட தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் லிஸ்ட்! ஒரு பார்வைஆரம்ப காலங்களில் மெமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த 'Don' படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது.

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். 

இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் 'வலிமை' படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நேற்று இரவு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர், "எப்போ வில்லனாக (Antagonist) நடிக்க போறீங்க? ஒரு ரசிகனாக உங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பாக்கனும்." என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "வித்தியாசமான கதாபாத்திரங்களில் என்னை கண்டிப்பாக பார்க்கலாம். கண்டிப்பாக முயற்சி பண்ணுவேன். வில்லன் ரோலில் நடிப்பது இயக்குனர்களை பொறுத்தது. அந்த இயக்குனரும் அவர்கள் சொல்லும் கதையையும் பொறுத்தது. அந்த மாதிரி இதுவரை யாரும் கதை சொல்லல. சொல்லும் போது கண்டிப்பாக யோசித்து பார்க்கிறேன்" என பதில் அளித்துள்ளார்.

 

Also Read | பாண்டிச்சேரியில் உங்களுக்கு பிடிச்ச இடம் எது? ரசிகரின் கேள்விக்கு 'செம' பதில் அளித்த SK!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Talked About Doing Antagonist Role in Movies

People looking for online information on Antagonist role, Prince, Sivakarthikeyan will find this news story useful.