சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம்.
'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது.
இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
டான் படத்தின் டப்பிங் பூஜையுடன் செப்டெம்பர் 23 ஆம் தேதி ஆரம்பமானது. S J சூர்யா, சூரி ஆகியோர் ஏற்கனவே டப்பிங் பணிகளை முடித்து விட்டனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் டப்பிங் பேசுவது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அடாது மழையிலும் விடாது டப்பிங் பேசி முடித்துள்ளதாக டிவீட் செய்துள்ளார். இந்த படம் தன்னுடைய கல்லூரி வாழக்கையை நினைவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.