சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. நடிகை மரியா வெளியிட்ட சரவெடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் புதிய சரவெடி அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நீ என் உலக அழகியே.." உருகிய விக்னேஷ் சிவன்..ஸ்பெயின் நகர வீதிகளில் நடிகை நயன்தாரா போட்டோஷூட்!

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார்.  மரியா , போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.  இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக நடிகை மரியா ரியாபோஷாப்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனுதீப் இருக்கும் BTS புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், நாங்கள் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டோம். இந்த பயணம் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. வேறொரு நாட்டில் 4 மாதம் தங்கி நல்ல மனிதர்கள் சூழ படப்பிடிப்பு செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுடன் இருப்பது போல இந்த அனுபவம் இருந்தது. படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என நடிகை மரியா ரியாபோஷாப்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | கொல மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளியானது ஜெயிலர் படத்தின் FIRST LOOK போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Starring Prince Movie Shooting Wrapped

People looking for online information on Prince Movie, Prince Movie Shooting, Sivakarthikeyan will find this news story useful.