BREAKING: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படத்தின் அடுத்த SUPER அப்டேட்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

Also Read | கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் OPPENHEIMER.. வெளியான வேற லெவல் ரிலீஸ் தேதி டீசர்!

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார்.  மரியா , போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.  இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த வாரத்துடன் நிறைவடையும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்ச் ஒர்க் & பாடல் காட்சிகள் இவ்வாரத்தில் படமாக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

பிரின்ஸ் படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | ANA DE ARMAS நடிக்கும் மர்லின் மன்றோவின் BIO PIC.. வெளியான சூப்பர் போஸ்டர் & டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan starrer Prince shoot to be wrapped this week

People looking for online information on Prince Movie, Prince Movie Updates, Sivakarthikeyan will find this news story useful.