"இன்னா மயிலு..." அடடே சிவகார்த்திகேயன் குரலில் மரண கலக்கல் பாடல்... குஷியில் கவின் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் வேட்டையனாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கவின் 'நட்புனா என்னனு தெரியுமா ?' படத்தின் மூலம் ஹீரோவானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது இயல்பான நடவடிக்கைகளால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

அதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த  நிகழ்ச்சிக்கு பின்பு அவரது அடுத்த படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு 'லிப்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் நடிகர் கவினுக்கு சர்ப்ரைசாக படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக ஹெப்ஸி தயாரித்துள்ளார். இந்நிலையில் லிப்ட் திரைப்படத்தில் கவினுக்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை ஐந்து மணிக்கு  வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

"இன்னா மயிலு..." அடடே சிவகார்த்திகேயன் குரலில் மரண கலக்கல் பாடல்... குஷியில் கவின் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan song in kavin film lift சிவகார்த்திகேயன் குரலில் கலக்கல் பாடல்

People looking for online information on Kavin, Sivakarthikeyan will find this news story useful.