சிவகார்த்திகேயன் நடிக்கும் SK20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அனுதீப் கேவியின் தெலுங்கு-தமிழ் இருமொழி திரைப்படத்திற்கு ஒரு சுவாரஸ்யமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை அறிவித்ததோடு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
PRINCE என்பது படத்திற்கான தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் ஒரு உலக உருண்டையுடன் வெள்ளை நிற சட்டை அணிந்துள்ளார். பின்புலத்தில் உள்ள கைகளில் உலக நாட்டின் தேசியக்கொடி வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன, மேலும் உலக வரைபடத்தையும் பின்புலத்தில் காணலாம் மற்றும் அமைதியின் சின்னமான புறாவையும் பின்னணியில் காணலாம். 'யாதும் ஊரே' என்ற 'கனியர்' பூங்குன்றனாரின் டேக் லைன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகையுடன் முழு நேர்மறை அதிர்வுகளுடன் இந்த போஸ்டர் உள்ளது, மேலும் அவர் அதில் ஒரு உண்மையான இளவரசராக தோன்றுகிறார். இது நிச்சயமாக ஒரு அவுட் அண்ட் அவுட் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் நாராயண் தாஸ் நரங், சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார். எஸ் தமன் இசையமைக்க, அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரின்ஸ் படத்தை விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். கோபுரம் பிலிம்ஸ் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது.
படத்தின் கதை இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் பின்னணியில் நடப்பதாக அமைந்துள்ளது. மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாகவும், மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.