உக்ரைன் நடிகைக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்த SIVAKARTHIKEYAN.. 'PRINCE' படத்தின் 2ND லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

SivaKarthikeyan SK 20 Prince Movie Second look Poster
Advertising
>
Advertising

Also Read | “அழகான ஜோடிக்கு அற்புதமான வாழ்க்கை…” பிரபலங்களின் வாழ்த்துகள்.. ட்ரண்ட் ஆன Nayan wedding pics

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அனுதீப் கேவியின் தெலுங்கு-தமிழ் இருமொழி திரைப்படத்திற்கு பிரின்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை அறிவித்ததோடு, நேற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

SivaKarthikeyan SK 20 Prince Movie Second look Poster

இந்நிலையில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. உக்ரைன் நடிகை மரியாவிற்கு சிவகார்த்திகேயன் திருக்குறள் சொல்லிக் கொடுப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகை மரியா, இங்கிலாந்து நாட்டுப் பெண்ணாக நடிக்கிறார்.

இந்த படம் ஒரு அவுட் அண்ட் அவுட் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் நாராயண் தாஸ் நரங், சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார். எஸ் தமன் இசையமைக்க, அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரின்ஸ் படத்தை விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர்.

படத்தின் கதை இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் பின்னணியில் நடப்பதாக அமைந்துள்ளது. மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாகவும், மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

Also Read | BGM 8 MOMENTS: “அஜித்துக்கு on screen-ல சரியான ஜோடினா…” டக்குன்னு விக்னேஷ் சிவன் சொன்ன பெயர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan SK 20 Prince Movie Second look Poster

People looking for online information on Prince Movie Second look Poster, Sivakarthikeyan, SK 20, SK 20 Prince Movie will find this news story useful.