VIDEO: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் கலக்கலான டிரெய்லர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் (25.09.2021) இன்று வெளியானது. டிரெய்லரில் உடல் உறுப்பு திருட்டு, பெண் குழந்தைகள் கடத்தல் வியாபாரம் போன்றவை கதைக்களமாக அமைந்துள்ளன. யோகிபாபு, சிவகார்த்திகேயன் காமெடி நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது போல தெரிகிறது. துப்பறிவாளன் படத்திற்கு பிறகு வினய் வில்லனாக இந்த படத்தில் நடித்துள்ளார். சில இடங்களில் படத்தின் டிரெய்லர் தன்மை கோலமாவு கோகிலா படத்தை நினைவூட்டுவது போல உள்ளது. 

VIDEO: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் கலக்கலான டிரெய்லர்! எப்படி இருக்கு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan satrring doctor movie trailer released

People looking for online information on Doctor, Sivakarthikeyan will find this news story useful.