'காசு குடுத்தாதான் நோட்டாவுக்கு கூட ஓட்டு!'.. 'யோகிபாபுவின்' புதிய படம்.. மரண மாஸ் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷின் மாரி, மாரி-2 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலாஜி மோகன்.

இவர் தற்போது யோகிபாபு நடிக்கும் மண்டேலா என்கிற படத்தை சஷிகாந்தின்  Y Not Studios, Reliance Entertainment மற்றும் Wishberry films உள்ளிட்டவற்றுடன் இணைந்து தமது Open Window நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடக்‌ஷனின் கீழ் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

யோகிபாபு, ஷீலா, சங்கிலி முருகன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிவகார்த்திகேயன் வெளியிட்ட மண்டேலா டீசரை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

டீசரில், முடிதிருத்தம் செய்பவராக வலம் வரும் யோகிபாபு டீசரின் முடிவில், ‘2 பேருக்கு தானே ஓட்டு போடச் சொன்னீங்க.. இப்ப 3வது ஒருத்தன் நிக்கிறான்’ என கேட்கிறார். அது நோட்டா என்று சொல்ல,  ‘நோட்டாவாக இருந்தாலும் கோட்டாவாக இருந்தாலும்’ காசு கொடுத்தால் தான் ஓட்டு என்கிறார். எலக்‌ஷன் நேரத்தில் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: 'மாரி' இயக்குநர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு.. Viral ஆகும் FirstLook போஸ்டர்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan releases Yogi Babu Mandela Teaser மண்டேலா டீசர்

People looking for online information on Mandela, Sangili Murugan, Yogi Babu will find this news story useful.