பாலாவின் NEXT.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட மிரட்டலான FIRST LOOK.!! - 'விசித்திரமான டைட்டில்தான்.!'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாலா அடுத்ததாக தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் பெரிதும் கவர்ந்தன. இவர் தற்போது தனது அடுத்தப்படத்திற்கான கதை உருவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். 

இந்நிலையில் அடுத்ததாக பாலாவின் B Studios நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. விசித்திரன் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜோசப் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகவுள்ளது. மலையாள வெர்ஷனை இயக்கிய பத்மகுமார் இப்படத்தையும் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

இயக்குநர் பாலா தயாரிக்கும் அடுத்தப்படம் | Sivakarthikeyan releases bala rk suresh upcoming film first look

People looking for online information on Bala, RK Suresh, Vichithran will find this news story useful.