சென்சாரான சிவகார்த்திகேயனின் 'DON'.. ரன்னிங் டைம் எவ்வளோ? என்ன சர்டிஃபிகேட்? அசத்தல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: அனிருத் இசையில் கமல் நடிக்கும் விக்ரம்.. முதல் சிங்கிள் பாட்டு ரிலீஸ் எப்போ?

Lyca Productions ஏற்கனவே அதன் முந்தைய வெளியீட்டான 'RRR' மூலம், மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது, இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை குவித்தது. பார்வையாளர்களை திரையரங்குகளுக்குள் ஈர்ப்பதற்கு திரைப்படத்தின் சரியான வெளியீட்டு தேதியை கண்டுபிடிப்பதில் தயாரிப்பு நிறுவனம் மிகவும் ஆர்வமாக இருந்தது.

ஏற்கனவே கோடை விடுமுறைகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், ‘டான்’ படம் குடும்ப பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுத்து வரும் என்பது உறுதியான ஒன்று. கேளிக்கை, இசை, பொழுதுபோக்கு, மேலும் பல கவர்ச்சிகளுடன் கூடிய ‘டான்’ திரைப்படம் ஒரு முழுமையான பொழுதுபோக்காக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ஏற்கனவே தனது முந்தைய படங்களின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான வசூலை நிரூபித்திருப்பதால், இந்த படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு இருக்கும் என  தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.

சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள் மோகன் எஸ்.ஜே.சூர்யா முதன்மை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல முன்னணி நடிகர்கள்  இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), KM.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டூனி ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J - AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM  தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions சார்பில்,  Sivakarthikeyan Productions  உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் டான் படம் சென்சாரகியுள்ளது. CBFC மூலம் சென்சார் செய்யப்பட்டு டான் படம் 'U' சான்றிதழ் பெற்றுள்ளது.  18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம் என சான்றழிக்கப்பட்டுள்ளது.

மேலும் டான் படம், 2 மணி நேரம் 45 நிமிடங்கள் (165 நிமிடம்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

சென்சாரான சிவகார்த்திகேயனின் 'DON'.. ரன்னிங் டைம் எவ்வளோ? என்ன சர்டிஃபிகேட்? அசத்தல் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Priyanka Mohan Don Movie Censored U

People looking for online information on Don Movie, Don Movie Updates, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.