"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
Also Read | AK62: "அமைதிக்கு முன் புயல்".. அஜித்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!
இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த படத்தை தயாரிக்கின்றன.
இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ப்ரின்ஸ் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ப்ரின்ஸ் படம் Premium Large Format எனும் புது வித Aspect Ratioவில் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. PLF வடிவமானது 1.89 Aspect Ratio கொண்டது. ஐமாக்ஸ் வடிவம் 1.89:1 என்ற Aspect Ratio கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் தமிழ் சினிமாவில் பீஸ்ட் படம் PLF வடிவத்தில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெட் வகை கேமராவான Red Ranger Monstro 8K & Red Raptor கேமரா கொண்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ப்ரின்ஸ் படமும் PLF வடிவத்தில் தீபாவளிக்கு திரையிடப்பட உள்ளது. பீஸ்ட் & ப்ரின்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. மொத்த ஐரோப்பிய தியேட்டர் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! மாஸ்