SIVAKARTHIKEYAN : போடு வெடிய..!.. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் - அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.  இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.   இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இவர்களுள் நடிகை மரியா ரியாபோஷாப்கா, போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி, இந்த ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியாகலாம் என பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேகமாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது, அதன்படி, பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Prince movie release date Official announcement

People looking for online information on Prince, Prince Release date, Sivakarthikeyan will find this news story useful.