சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் முன் வெளியீட்டு விழா பிரபல முன்னணி டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Also Read | கன்னடத்தில் பட்டைய கிளப்பும் 'காந்தாரா'.. படம் பார்த்த பின் நடிகர் தனுஷ் வைரல் ட்வீட்!
"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.
இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த படத்தை தயாரிக்கின்றன.
இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.
சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் முன் வெளியீட்டு விழாவில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரின்ஸ் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | "தொட்டாலே TREND தான்".... கார்த்தி -யின் 'சர்தார்' டிரெய்லர்.. இந்த தீபாவளில டபுள் ஆக்சன் ட்ரீட்!