சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'.. படத்தின் OTT- உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'படத்தின் டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெங்கட் பிரபு & நாக சைதன்யா இணையும் புதிய படம்.. வெளிவந்த சரவெடி அப்டேட்! முழு விவரம்

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவான 'ப்ரின்ஸ்' படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்த ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் மூலம் இந்த படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 427 திரையரங்க திரைகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. அதிகாலை 4 & 5 மணிக்கு முதல் சிறப்பு காட்சிகள் தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் திரையிடப்பட்டது.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ப்ரின்ஸ் படத்தின் டிஜிட்டல் ஒடிடி  ஒளிபரப்பு உரிமத்தை பிரபல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக படத்தின் ரிலீஸ் நாள் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சந்தீப் கிஷன் & விஜய் சேதுபதி நடிக்கும் 'மைக்கேல்'.. நடிகர் தனுஷ் வெளியிட்ட மிரட்டலான டீசர்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie OTT Digital Streaming Rights

People looking for online information on Disney Plus Hotstar, Prince, Prince Movie OTT Digital Rights, Sivakarthikeyan will find this news story useful.