"மாமன் மச்சான் எல்லாம் இனி.." அனிருத் குரலில் PRINCE படத்தின் முதல் சிங்கிள் பாட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Life of Muthu: கையில் கட்டுடன் சிம்பு.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டர்!

டாக்டர் & டான் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் அனுதீப் கேவி இயக்கும்  பொழுதுபோக்கு படமான 'பிரின்ஸ்' படத்தில் நடிக்கிறார்.

இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் இங்கிலாந்தின் லண்டன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

இன்று (செப்டம்பர் 1 ஆம் தேதி)  இந்த படத்தின் 1st சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. பிம்பிளிக்கி பிளாப்பி எனும் இந்த பாடலை விவேக் எழுதி உள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் உடன் ரம்யா பெஹாரா, சகிதி ஷகாந்தி பாடியுள்ளனர்.

இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். நாராயண் தாஸ் நரங், சுனில் நரங் ஆகியோரின் ஆசியுடன் புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோருடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார்.

ஒளிப்பதிவாளர்‌ மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் கைப்பற்றியுள்ளார்.

Also Read | சூரி & விஜய் சேதுபதி நடிக்கும் 'விடுதலை'.. TV ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்!

"மாமன் மச்சான் எல்லாம் இனி.." அனிருத் குரலில் PRINCE படத்தின் முதல் சிங்கிள் பாட்டு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie Bimbilikki Pilapi First Single Song

People looking for online information on Bimbilikki Pilapi First Single Song, Prince Movie, Sivakarthikeyan will find this news story useful.