சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் & ரன்னிங் டைம் விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படம்  சென்சாராகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் சூப்பர் ஹிட் ரீமேக் படம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான 1st LOOK போஸ்டர்!

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரெய்லர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் 'வலிமை' படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | வசூல் மழை பொழியும் 'பொன்னியின் செல்வன்'.. உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா? முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince CBFC Censored U Running Time Details

People looking for online information on Prince, Prince Movie Updates, Sivakarthikeyan will find this news story useful.