PRINCE படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்.. SK-ன் சூப்பர் டான்ஸ்சுடன் வெளியான GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'BEAST' படத்துக்கும் 'PRINCE' படத்துக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? சூப்பர் தகவல்

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த 'Don' படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது.

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.  இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். 

இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் 'வலிமை' படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் Who am I நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக Promo Video வை வெளியிட்டு  படநிறுவனம் அறிவித்துள்ளது. தமன் இசையில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

 

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. மொத்த ஐரோப்பிய தியேட்டர் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince 3rd Single Song Who am I Glimpse Video

People looking for online information on Prince, Prince 3rd Single Song, Sivakarthikeyan will find this news story useful.