LATEST: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தெலுங்கு ஹீரோயின் யார் தெரியுமா!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.

sivakarthikeyan next telugu movie update after doctor ayalaan don

அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த புதிய படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இணைகிறார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

sivakarthikeyan next telugu movie update after doctor ayalaan don

தனுஷ்-சேகர் கம்முலா படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் எல்.எல்.பி. நிறுவனமே இந்த சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற விவரங்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நெல்சன் திலிப்குமார் இயக்கி விரைவில் வெளி வர உள்ள 'டாக்டர்' திரைப்பட வெளியீட்டுக்காக சிவகார்த்திகேயன் தற்போது காத்திருக்கிறார்.  'அயலான்' மற்றும் 'டான்' படங்கள் இறுதிக்கட்ட பணிகளில் தற்போது உள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan next telugu movie update after doctor ayalaan don

People looking for online information on Rashmika Mandanna, Sivakarthikeyan will find this news story useful.