சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்.. ஷூட்டிங் குறித்து வெளியான OFFICIAL அப்டேட்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், Shanthi Talkies சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க, இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும்  "மாவீரன்"  திரைப்படத்தின் படப்பிடிப்பு,  எளிமையான பூஜையுடன் இனிதே  துவங்கியது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Shooting Started
Advertising
>
Advertising

Also Read | "சீதா ராமம்" ராஷ்மிகா மந்தனா & மிருணாள் பற்றி பேசிய துல்கர் சல்மான்.. முழு தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் "மாவீரன்" படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில்  எளிமையான பூஜையுடன் இனிதே  துவங்கியது.

மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும்  இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான  அருண் விஸ்வா Shanthi Talkies சார்பில்  இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

திரைப்பட துவக்க  விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார்.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு இயக்குனராக விது அயன்னா பணிபுரிகிறார்.
இசையமைப்பாளராக பரத் சங்கர் இசையமைக்க
எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிகிறார்.
கலை இயக்குனராக குமார் கங்கப்பனும்
ஸ்டண்ட் இயக்குனராக யானிக் பென்னும் பணிபுரிகிறார்கள்.

ஒலி வடிவமைப்பாளராக சுரேன் G, எஸ் அழகியகூத்தன் பணிபுரிகிறார்.
ஒலிக்கலவைக்கு சுரேனும்
ஆடை வடிவமைப்புக்கு தினேஷ் மனோகரனும் பணிபுரிகிறார்கள்.
ஒப்பனை கலைஞராக  சையத் மாலிக்கும்
உடைகளுக்கு நாகுவும் பணிபுரிகிறார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | ரன்பீர் கபூர் நடிக்கும் புதிய படம்.. படப்பிடிப்பில் இணைந்த பிரபல தென்னிந்திய நடிகை! வைரல் PHOTO

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Shooting Started

People looking for online information on Maaveeran, Maaveeran Movie, Maaveeran Movie Shooting, Siva, Sivakarthikeyan will find this news story useful.