பிரபல தெலுங்கு டாப் ஹீரோவுடன் புதிய படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்! காரணம் இது தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திக்கேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Sivakarthikeyan joining hands with Actor Naveen Polishety
Advertising
>
Advertising

டாக்டர் வெற்றி

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். டாக்டர் (Doctor) திரைப்படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.

Sivakarthikeyan joining hands with Actor Naveen Polishety

Don

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! காரணம் என்ன? முழு தகவல்!

தெலுங்கில் சிவகார்த்திகேயன்

நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2022 ஜனவரி மாதத்தில் 18 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் இசையமைப்பாளர் தமனை படக்குழுவினர் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப் உடன் நவீன் பொலிசெட்டியும் உள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயனுடன் நவீன் பொலிசெட்டி இந்த படத்தில் நடிப்பதை படக்குழுவும் உறுதி செய்துள்ளது.

மழையும், புயலும் ஒண்ணு சேந்துருச்சு டோய்.. உதயநிதி ரசிகர்களுக்கு செம 'ட்ரீட்' இருக்கு!!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan joining hands with Actor Naveen Polishety

People looking for online information on சிவகார்த்திகேயன், Naveen Polishety, Sivakarthikeyan will find this news story useful.