OTT-யில் இந்திய அளவில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனின் ’டான்’… NETFLIX வெளியிட்ட லேட்டஸ்ட் UPDATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டான் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | “அம்மாக்கு என்னாச்சுப்பா…” திணறும் சத்யராஜ்… கலகலப்பான ’வீட்ல விசேஷம்’ Sneak peek காட்சி

டான் வெற்றி…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்த இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்தன. மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றாலும் ‘டான்’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. திரைப்படத்தின் குறையாக Toxic parenting-ஐ ரொமாண்டிசைஸ் செய்வதாக சில விமர்சனங்களும் எழுந்தன.

வெற்றி விழா…

மிகப்பெரிய வெற்றி பெற்ற டான் திரைப்படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழா  சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில்  படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் வழங்கும் வெற்றிவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக லைகா சுபாஷ்கரன் இலண்டனில் இருந்து சென்னைக்கு வந்திர்ந்தார். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

ஓடிடி ரிலீஸ்…

இதையடுத்து சமீபத்தில் ஜூன் 10 ஆம் தேதி Netflix தளத்தில் ‘டான்’ திரைப்படம் வெளியானது. அதையடுத்து திரையரங்கில் பார்க்காத பார்வையாளர்கள் பார்த்து தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த வாரத்தில் இந்திய அளவில் டாப் 10 ட்ரண்டிங் படங்களின் டான் திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதை நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இணையத்தில் வைரலாகியுள்ளது. சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் இதைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Also Read | இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் ரிலீஸாகும் தமிழ் படங்கள் & சீரிஸ்… ஒரு பார்வை

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan don no 1 in netflix weekly India Top 10

People looking for online information on Don Movie, Don no 1 in netflix, Netflix, Sivakarthikeyan, Weekly India Top 10 will find this news story useful.