முதல்முறையாக பிரபல இந்தி TV சேனலில் சிவகார்த்திகேயனின் 'DON'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சிகளில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஆழ்ந்த யோசனையில் நடிகை இலியானா.. பிகினி உடையில் அவரே பகிர்ந்த வைரல் பதிவு!

சிவகார்த்திகேயனின் சமீபத்தைய திரைப்படமான டான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.‌ சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்தன. இந்த படம் கடந்த மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய மூவருக்கும் பாராட்டுகள் குவிந்தன. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும், சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனின் தந்தையாகவும் நடித்தனர்.

டான் திரைப்படம்  உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக  லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டான் திரைப்படம் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இந்நிலையில் டான் திரைப்படம்  தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பாகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி கலர்ஸ் சினிப்ளக்ஸ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு இந்தி மொழியில் 'டான்' படம் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | கார்த்தி நடிக்கும் 'விருமன்'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? செம்ம போஸ்டருடன் வந்த தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Don Movie World Television Premiere at Colors Cineplex

People looking for online information on Colors Cineplex, Don, Don Movie, Sivakarthikeyan, SivaKarthikeyan Don Movie will find this news story useful.