DON படத்தின் உலகளாவிய வசூல்.. லைக்கா வெளியிட்ட செம தகவல்..மாஸ் காட்டிய சிவகார்த்திக்கேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அடுத்தடுத்து 3 படங்கள் … நடிகர் கார்த்தியின் ரிலீஸ் line up! பிறந்த நாளில் ரசிகர்கள் குதூகலம்!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் இளைஞனின் கதையாக டான் படம் உருவாகியுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் & SK புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். டான் படத்தின் OTT ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.


இப்படத்தை பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாடுகளில் ஐபிக்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது. தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் டான் படம் ரிலீசாகி 12 நாட்கள் ஆன நிலையில் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக படத்தின் வசூலை அறிவித்துள்ளது. அதன்படி டான் படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படம் 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'KGF' இயக்குனர் & பிரபாஸ் இணையும் புதிய படம்.. படப்பிடிப்பில் இணைந்த முன்னணி தமிழ் நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Don Movie 100 crore Box Office Collection

People looking for online information on Box Office Collection, Don Movie, Sivakarthikeyan, SivaKarthikeyan Don Movie Box Office will find this news story useful.