சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தோட தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையில், 'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம்  கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும்  தமிழில் வெளியான அதே நாளில் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.

விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குறிப்பாக படத்தின் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வசூல் பற்றிய நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதன்படி டாக்டர் திரைப்படம் முதல் நாள் வசூலாக தமிழகத்தில் மட்டும் சுமாராக 7.36 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வசூல் மிகப்பெரியது.இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 10.80 கோடி வசூலித்ததே சிவகார்த்திகேயன் படங்களின் முதல் நாள் வசூல் சாதனை ஆகும். 

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Doctor's gross collection on Tamil Nadu Day one

People looking for online information on Nelson, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.