100 கோடி ரூபாய் வசூல் செய்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

Advertising
>
Advertising

இந்த டாக்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும்  தமிழில் வெளியான அதே நாளில் வருண் டாக்டர் (Varun Doctor) என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, இளவரசு, ரெட்டின் கிங்க்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் நவம்பர் 4 அன்று வரும் தீபாவளிக்கு சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது டாக்டர் திரைப்படம். இது பற்றிய ப்ரோமோக்களும் ஒளிபரப்பாக உள்ளன.

இந்நிலையில் இந்த படம் வெளிவந்து 23 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பான KJR ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை KJR Studios டிவிட்டரில் அறிவித்துள்ளது.

 

 

Sivakarthikeyan Doctor Movie Joined 100 cr Gross Club

People looking for online information on Anirudh, KJR Studios, Nelson, Priyanka Mohan, Siva Karthikeyan, Vinay will find this news story useful.