டாக்டர் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செல்லம்மா பாடலின் CUTE ஆன GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

பின்னர் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து Soul of Doctor தீம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மிகவும் பிரபலமான செல்லம்மா பாட்டின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே 120 மில்லியன் பார்வையாளர்களை இந்த பாடலின் லிரிக் வீடியோ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செல்லம்மா பாடலின் CUTE ஆன GLIMPSE வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan doctor movie chellamma song glimpse video

People looking for online information on Anirudh, Doctor, Nelson, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.