நடிகர் சிவகார்த்திகேயன் மகளா இது.. சின்ன குழந்தையில் பார்த்தது.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக இணைந்த டாக்டர் படத்தின் இரண்டாம் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும் யோகிபாபு, பிக்பாஸ் அர்ச்சனா, குக் வித் கோமாளி தீபா  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல் பாடலான 'செல்லம்மா' கடந்த வருடம் ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சிங்கிலான 'ஓ பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் நெல்சன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த மாமாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர்களுக்கு ஆராதனா என்ற அழகான குழந்தை இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தில் கூட தனது தந்தையுடன் சேர்ந்து ஆராதனா "வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலும் ஹிட் அடித்தது. மிக சிறிய வயதில் பார்த்த குழந்தை ஆராதனா  தற்பொழுது வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தில் இருப்பது ஆராதனா தானா என்று ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் மகளா இது.. சின்ன குழந்தையில் பார்த்தது.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan daughter latest photo viral நடிகர் சிவகார்த்திகேயன் மகளா இது

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.