நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடிய வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
Also Read | "Cinema மட்டும் சொல்ல முடியாது.. வாழ்றதே ஆணாதிக்க சமூகத்துலதான்" - ஸ்ருதிஹாசன்.!
மகாபலிபுரத்தில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஒன்றிய அரசின் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை அண்மையில் (ஜூலை 28 ஆம் தேதி)தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பல அரசியல், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் வந்திருந்தனர். ஆளுநர் ரவியும் கலந்து கொண்டார்.
தொடக்க விழாவை போல, ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தது. இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் உள்ளிட்டோர் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தனர். இதில், டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் டிரம்ஸ் வாசித்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆனது.
இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை குழுவினருடன் இணைந்து பாடி அசத்தியுள்ளார். சிவப்பு நிற பட்டுடை அணிந்து ஆராதனா இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் இருந்த குழுவினரும் செந்நிற ஆடை அணிந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆராதனா ஏற்கனவே கனா படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதுடன் யூடியூப் பக்கத்தில் பல சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | காமன்வெல்த் அரங்கில் மாஸ் காட்டிய யுவன் பாடல்.. வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்!!.. Viral வீடியோ