SK பர்த்டேவில் மிஷ்கின்.. கேக் ஊட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"டான்" படத்துக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "ஆத்தா மதுரை மீனாட்சி துணை".. SKவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூரி..!

இந்த ப்ரின்ஸ் படம்  கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை மாவீரன் படக்குழுவினர் உடன் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் மடோன் அஸ்வின், நடிகர் மிஷ்கின், நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் உடன் இருந்தனர். சிவகார்த்திகேயனுக்கு மிஷ்கின் வாழ்த்து கூறும் காட்சிகளும் அவருக்கு கேக் ஊட்டி விடும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளன.

Also Read | உயிர்காக்க பணம் கொடுத்து உதவிய சிவகார்த்திகேயன் & H. வினோத்.. நெகிழ்ச்சியான தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Birthday Celebration Cake Cutting with Maaveeran Team

People looking for online information on Maaveeran, Sivakarthikeyan will find this news story useful.