BREAKING: தமிழ் - தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்! வெளியான செம MASS ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம்.

Advertising
>
Advertising

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், Single Song சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ் நிறுவனமே இந்த சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2022 ஜனவரி மாதத்தில் 18 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் இசை இயக்குனர் தமன் டிவிட்டரில் டிவீட் செய்து ''உங்கள் அன்பு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21'' என்று குறிப்பிட்டு இருந்தார். 

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan - Anudeep movie shooting starts on January 18th

People looking for online information on Anudeep, Jathi Ratnalu, Sivakarthikeyan, SK, SK21 will find this news story useful.