வேற லெவல்… ‘DON’ சக்ஸஸ் பார்ட்டி… சிவகார்த்திகேயன் & SJ சூர்யாவுடன் படக்குழுவினர் … வைரல் PICS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டான் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | திருமண மேடையில் மறைந்த அம்மாவின் உருவத்துடன் இமான்… நெகிழ்ச்சி பதிவு… வைரலாகும் PIC

சிவகார்த்திகேயனின்  ‘டான்’…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கதைக்களம்…

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டான் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது டான் திரைப்படம். படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய மூவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சக்ஸஸ் கொண்டாட்டம்…

ரிலீஸூக்கு பின் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டாக்டர் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என கணிப்புகள் சொல்லப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று ‘டான்’ படக்குழுவினர் படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

மேலும் லைகா நிறுவனத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் “டான் படத்தை பிளாக்பஸ்டர் வெற்றியாக்கிய அனைவருக்கும் நன்றி. எங்களின் பிரைவேட் பார்ட்டி கேங் உங்கள் அன்பால் மேலும் பெரிதாகிறது” என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சக்ஸஸ் மீட்டில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, சிவாங்கி உள்ளிட்ட நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan and S J suryah in Don movie success meet

People looking for online information on Don Movie, Don movie success meet, S J Suryah, Sivakarthikeyan will find this news story useful.