''BREAKING NEWS: மாட்டிக்கிட்டாப்ள, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால், அர்ஜூன் நடிப்பில் மின்னணு பணப்பரிவர்த்தனைகளில் நடைபெறும் குற்றங்களை பற்றி நமக்கு தெளிவாய் எடுத்துச் சொன்ன படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இதனையடுத்து பி.எஸ்.மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து 'ஹீரோ' படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் ''Breaking News: ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் நாட்டை விட்டு வெளியேற பார்க்கிறார். புடிச்சிட்டேன். சிவகார்த்திகேயன் அண்ணே, மாட்டிக்கிட்டாப்ல னே! புடிச்சு ஜெயில்ல போடுங்க சார். 'ஹீரோ' ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. என்றார்.

அதற்கு சிவகார்த்திகேயன் அளித்த பதிலில், அப்படி சொல்லிட்டு நீங்களும் எஸ்கேப் ஆகுறிங்க போலயே மிஸ்டர் மித்ரன் . என்று கலாய்த்துள்ளார். அதற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் நல்லா கேளுங்கண்ணே எங்க போறாருனு வொர்ஸ்டு பிஹேவியர்னே'' என்று பதிலளித்துள்ளா்.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan and PS Mithran have fun about Hero Movie

People looking for online information on Hero, PS Mithran, Sivakarthikeyan will find this news story useful.