தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தின் கலைமாமணி விருதுகள் இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் கைகளால் வழங்கப்பட்டுள்ள இந்த விருது வெவ்வேறு வயது, வெவ்வேறு விதமான கலைத்தொழில் புரிவோர்க்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு மற்றும் பலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொறுப்பான சின்சியரான காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய சிவகார்த்திகேயனின் தந்தை, மறைந்த தமிழக முதல்வர் கலைஞரிடம் விருது பெறும் புகைப்படத்தையும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கலைமாமணி விருது பெறும் புகைப்படத்தையும் இணைத்து இணையத்தில் சிலர் பதிவிட, இந்த நெகிழ்வான புகைப்படம் வைரலாகி வருகிறது.
மகனும் தந்தையும் அவரவர் வாழ்நாளில் முதல்வரிடம் பெறும் கவுரமான அங்கீகாரம் என பலரும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பகிர்ந்து வருகின்றனர். காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய சிவகார்த்திகேயனின் தந்தை G.தாஸ் 2003-ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தமிழக முதல்வரிடம் 2019-2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்!