நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வருகிற 17ஆம் தேதி மிஸ்டர்.லோக்கல் படம் வெளியாகவுள்ளது. காமெடி படங்களுக்கு புகழ்பெற்ற ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நேற்று இன்று நாளை பட இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 16-வது படமாகும். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
இப்படத்தில் டி.இமான் இசையமைப்பாளாராக பணியாற்ற, படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்து புகழ் பெற்ற, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அனு இமானுவெல் தான் இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.