விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. ஏற்கனவே இந்நிகழ்ச்சியின் 2 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது, இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா மற்றும் 2வது சீசனில் கனி ஆகியோர் டைட்டில் வென்றனர்.
Also Read | பேரனுடன் அமெரிக்காவில் T. ராஜேந்தர்.. கூட யார் இருக்கானு பாருங்க.. இணையத்தை கலக்கும் LATEST போட்டோ!
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3-ல் குக்குகளாக ஸ்ருதிகா, வித்யூலேகா, அம்மு அபிராமி, தர்ஷன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். கோமாளிகளாக பரத், மணிமேகலை, சுனிதா, பாலா, சிவாங்கி, குரேஷி என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த மூன்றாவது சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித்யூலேகா சமைத்துக் கொண்டிருக்க அவருடைய டேபிளில் சென்று அவரிடம் சிவாங்கி கலகலவென்று பேசிக்கொண்டு இருந்தார். அவரை கபாலி கெட்டப்பில் பார்த்த வித்யூலேகா, “உன்னுடைய கபாலி கெட்டப் நன்றாக இருக்கிறது... எப்போதும் நீ போடும் ரஜினி சாரின் கெட்டப் எல்லாமே அருமையாக இருக்கிறது.. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறுகிறார்.
இதற்கு பதில் சொல்லும் சிவாங்கி, “அப்படியா ரொம்ப நன்றி.. ஏனென்றால் எனக்கு தலைவரை மிகவும் பிடிக்கும்.. ஒரே ஒருமுறை அவரை பார்த்து பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று கூறுகிறார். அவர் விருப்பம் தெரிவித்த உடனே வித்யூலேகா, “அதற்கென்ன நான் அழைத்துச் செல்கிறேன்.. இந்த சீசன் முடியட்டும் நான் உன்னை தலைவரிடம் அழைத்துச் செல்கிறேன்.!” என்று கூறுகிறார்.
அப்போது பேசிய வித்யூலேகா, “சிவாங்கி நீ தலைவர் கெட்டப் போடுவது பற்றி ஏற்கனவே அவரிடம் கூறிவிட்டேன்.. அவரிடம் உன்னை அழைத்துச் செல்லவில்லையே தவிர, உன்னை பற்றி ஏற்கனவே நான் அவரிடம் கூறியிருக்கிறேன்!” என்று சொல்கிறார். உடனே சிவாங்கி குஷி ஆகி குதிக்கிறார். இதை பார்ப்பதற்கே கியூட்டாக இருந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | மிகப்பெரிய மாஸ் சாதனை படைத்த தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. பின்னணி தகவல்