'வலிமை' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவாங்கி!... ஹீரோ யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் Article15. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று அந்த படத்தின் தமிழ் பதிப்பை உருவாக்கி வருகிறார் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

தமிழில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிய நிலையில் அண்மையில் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்புக்கு முன்னதாக அண்மையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு மவுன அஞ்சலி செலுத்திய பிறகு மலர்தூவி படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கினர். இந்த படப்பிடிப்பின் துவக்கத்தின் போது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, வினியோக நிர்வாகி ராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் அருண்ராஜா காமராஜ், கனா திரைப்படத்திற்கு பிறகு இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல பாடகியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் ஏகோபித்த வரவேற்பையும், தனக்கென்று ஒரு தனி இடத்தையும் பிடித்துள்ள சிவாங்கி இணைந்திருக்கிறார்.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கிவரும் டான் திரைப்படத்தில் சிவாங்கி நடித்து இருந்தார். அத்துடன் கவின் நடித்த அஸ்கு மாரோ பாடலில் பாடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இப்படியும் ஒரு பேரா? கூப்ட்டு முடிக்குறதுக்குள்ள... விவேக் காமெடி பாணியில் நடந்த தரமான சம்பவம்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi to act in valimai producers next flick Article15

People looking for online information on Article 15, Bayview Projects, Boney kapoor, Sivaangi, Udhayanidhi Stalin will find this news story useful.