விஜய் டிவி சீரியலில் சிவாங்கி மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! எந்த சீரியல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-2 சீரியல்களின் சங்கமம் பகுதி தற்போது விஜய் டிவியில் இரவு 9 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

Sivaangi special appearance vijay tv serial 2021 march 30

இதில் சூப்பர் குடும்பத்தை தேர்ந்தெடுக்கும் விழாவில் இரண்டு தரப்பு குடும்பங்களும் பங்குபெற்றது போலான காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் மார்ச் 30,2021 எபிசோடில் சமைக்கும் போட்டி நடக்கவிருக்கிறது. அதில் டோக்கன் முறையில் யார் என்ன உணவு சமைக்கவேண்டும்,  முதலில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் உணவை யார் சமைக்க வேண்டும் என்கிற செலக்‌ஷன் முதலில் நடைபெறும்.

Sivaangi special appearance vijay tv serial 2021 march 30

பின்னர் சௌந்தர்யா குடும்பத்தில் இருந்த கண்ணம்மாவும், சிவகாமி குடும்பத்தில் இருந்து சந்தியாவும் (ஆல்யா மானசா) சமைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு இந்த  சமையல் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக சரத், பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் குக் வித் கோமாளி மூலமாக பிரபலமான பாடகி சிவாங்கி பாப்பா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த சீரியலில் சிவாங்கியாகவே சிவாங்கி கலந்துகொண்டுள்ளார். வாரவாரம் குக் வித் கோமாளியில் சமையல் அட்ராசிட்டியை செய்யும் சிவாங்கி இந்த சீரியலில் நடக்கும் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் இருக்கும் சரத், பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரால் காமெடிக்கும் கவுண்ட்டர்களுக்கும் பஞ்சமில்லை.

1 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த பாரதி கண்ணம்மா, ராஜா ராணி-2 மெகா சங்கமம் சீரியலை இந்த வாரம் தினமும் இரவு 9 மணிக்கு காணலாம்.

ALSO READ: சிவாங்கி பாடி, நடித்துள்ள கவின், தேஜூ அஸ்வினியின் AskuMaaro ..Viral ஆகும் ப்ரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi special appearance vijay tv serial 2021 march 30

People looking for online information on Bala, BharathiKannamma, MegaSangamam, RajaRani2, Sarath, Trending, Vijay Television, Viral will find this news story useful.